banner-image

சமூக மற்றும் நிறுவன ரீதியான சேவைகள்

சிறியளவான விவசாய வணிகம் மற்றும் மீண்டெழல் கருத்திட்டம் (SARP) எனப்படுவது ஐக்கிய நாடுகளின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுடன் (SDGs) ஒத்திசையக் கூடிய மற்றும் ஏனைய பிரிவூகளுக்குச் சமமாக கவனம் செலுத்தப்படுகின்ற மற்றும் விவசாய வணிக நடவடிக்கைகள் தொடர்பாக முன்னுரிமை வழங்கக் கூடிய குடி மக்களின் தாங்கு திறனைக் கட்டியெழுப்புகின்ற கருத்திட்டமொன்றாகக் காணப்படுகின்றது. சிறியளவான விவசாய வணிகம் மற்றும் மீண்டெழல் கருத்திட்டத்தின் மூலம் சமூக உள்ளடக்கம் மற்றும் நிறுவன கட்டமைப்பு செயற்பாடு தொடர்பாக கூடியளவில் கவனம் செலுத்தப்படும். இது கருத்திட்ட செயற்பாடுகளின் தாக்கத்தில் பெருமளவில் பங்களிப்பை வழங்குகின்ற அடித் தளமாக செயற்படுகின்றது. இக் கருத்திட்டம் செயற்படுத்தப்படுகின்ற ஆறு மாவட்டங்களில் சமமான சமூக உள்ளடக்கத்தின் பிரதிநிதித்துவம் மற்றும் பன்முகத் தன்மையையூம் உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகள் கட்டியெழுப்பப்பட்ட வண்ணமுள்ளது. இக் கருத்திட்டம் பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் மலாய் இனத்தவர்களுக்குப் பாகுபாடின்றி அளப்பரிய சேவைகளை ஆற்றிய வண்ணமுள்ளது. குறிப்பாக சிறியளவான விவசாய வணிகம் மற்றும் மீண்டெழல் கருத்திட்டம் (SARP) மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் ஏழைகள் உட்பட ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள குழுக்களை இலக்கிட்டதாக செயற்படுத்தப்படுவதுடன், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் இது உறுதுணையாக அமைந்துள்ளது. சமூக விருத்தி மன்றங்களை நிலைநாட்டுவதன் மூலம் சிறியளவான விவசாய வணிகம் மற்றும் மீண்டெழல் கருத்திட்டம் (SARP) புதுமை, படைப்பாற்றல் மற்றும் நீண்ட கால பின்னடைவூ ஆகிய செயற்பாடுகளை ஊக்குவித்து அதன் செயற்பாடுகளுக்கும் ஏந்து கரமாக அமைந்துள்ளது. இறுதியாக சமூக உள்ளடக்கம் மற்றும் நிறுவன ரீதியான வளர்ச்சி தொடர்பாக சிறியளவான விவசாய வணிகம் மற்றும் மீண்டெழல் கருத்திட்டத்தின் பங்களிப்பு இத்தீவில் வாழ்கின்ற அனைத்து சமூகங்களுக்கும் சட்ட நெறிமுறையான, சமத்துவ மிக்க மற்றும் சமூகத்தின் நிலைப்பாடு தொடர்பாக முன்னுரிமை மிக்க பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது.